இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்வதற்கான தடையுத்தரவினை நீக்குமாறு இலங்கை தூதரகம், ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அது மாத்திரமன்றி இது தொடர்பில் வெளியுறவு அமைச்சகத்திடம் ஐக்கிய அமீரகத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்து வருகிறது.

இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதன் ஊடாக அவர்களின் தொழில்களை பாதுகாப்பதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காக காத்துள்ளது.

அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்துடன் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டவுடன் அனைவருக்கும் உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் இலங்கை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.