லோகன் பரமசாமி

இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிக ஈடுபாடுகொண்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் முக்கிய இடத்தை வகிக்கிறது. பிரான்ஸின் செல்வாக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் வலுப் பெறுவதற்கு அதன் காலனித்துவ நாடுகளே முக்கிய காரணிகளாக உள்ளன.

மொரிசியஸ் தீவிற்கு அருகாமையில் உள்ள ரியூனியன் தீவுகளும் மொசாம்பிக்கடல் வழிப்பாதையில் உள்ள மயோற் தீவுகளும் இன்னமும் பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட தீவுகளாகவே இருப்பது சட்டபூர்வமாக பிரான்ஸ் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை வைத்திருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது முற்றுமுழுதான நடவடிக்கைப் பிராந்தியமாக மாற்றுவதற்கு இந்தியா எத்தனித்து வருகிறது. இதன் காரணமாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவுக் கூட்டங்களில் நேரடியாக தனது செல்வாக்கை பேணுவதில் இந்தியா முக்கிய கவனம் செலுத்துகிறது. 

ஆனால் இந்தச் சிறு தீவுகள் இந்து சமுத்திரத்தின் மேற்கு கரையில் பிரான்ஸின் ஆதிக்கத்தில் உள்ளது. இதனால் பிரான்ஸுடன் நல்லுறவு பேணுவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டுகிறது. பிரான்ஸும் இந்தியாவும் கூட்டாக தமது கடல் எல்லைகளின் மூலோபாய நலன்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த கடல் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ரோந்துப் பணிகள் கால அட்டவணையைக் கடந்து அவ்வப்போது தேவையான போதெல்லாம் இடம்பெறுகிறது.

சர்வதேச வர்த்தக மற்றும் தொடர்பாடலை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பாதைகளின் பாதுகாப்பை இரு நாடுகளும் கூட்டு ரோந்து மூலம் வலுப்படுத்துகின்றன. மேற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேற்கு கரை ரோந்துப் பணிகளில் தாமும் ஈடுபடுவதில் ஆர்வம் தெரிவித்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவதற்கு இந்தியா மறுத்து விட்டது. 

எவ்வளவுதான் பொருளாதார ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் அமெரிக்க, இந்திய நட்புறவுகள் வளர்ச்சி அடைந்து வருகின்ற போதிலும் இந்து சமுத்திரச் செல்வாக்கு விவகாரத்தில் அமெரிக்க - இந்திய மறைமுகப் போட்டியொன்று என்றும் இருந்தே வருவதை இது எடுத்து காட்டுகிறது.

இந்தியா தனது சொந்த நலன்களின் அடிப்படையில் புதுடெல்லியுடன் இணைந்து செயலாற்றக்கூடிய இந்து சமுத்திர பிராந்திய நாடுகளிடம் தனது தனித்துவமான சௌகரியங்களை பேணுவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இது நீண்டகால மூலோபாய நோக்கம் கொண்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.