எரிவாயு விலைகளை அதிகரிக்காதிருப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது. இன்று  திங்கட்கிழமை காலை கூடிய வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தன. அந்த கோரிக்கைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு இன்று கூடிய உப குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.