யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான  ஒரு தொகுதி இந்தியர்கள் யாழ்.கோப்பாய்  கொரோனா  சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , 

கொழும்பு புறநகர்ப் பகுதி ஒன்றில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட இந்தியர்கள் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இரண்டு வருடத்துக்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து தொழில் புரிவதாக தெரியவந்துள்ளது. 

ஆகவே அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவித்தார்.