தொண்டைமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கஞ்சா போதைப்பொருள்  கடத்திய  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கஞ்சா போதைப்பொருட்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.