பிரபல மனித உரிமை ஆர்வலர் ஆலா அல்-சித்திக் கார் விபத்தில் பலி

By Vishnu

21 Jun, 2021 | 11:09 AM
image

பிரபல எமிரேட்ஸின் மனித உரிமை ஆர்வலரும், விமர்சகருமான அலா அல்-சித்திக் சனிக்கிழமை லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

சித்திக், ஐக்கிய இராச்சியம் மற்றும் பரந்த வளைகுடா பிராந்தியத்தில் அதிக சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட ALQST இன் நிர்வாக இயக்குநரும் ஆவார்.

அவரது தந்தை மொஹம் அல்-சித்திக், ஒரு முக்கிய ஆர்வலர் ஆவார். அவர் 2013 முதல் எமிராட்டி அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சித்திக்கின்  மரணம் ஒரு விபத்து என்றும் அவரது குடும்பத்தினர் எந்தவொரு குற்றவியல் நோக்கத்தையும் சந்தேகிக்கவில்லை என்றும் சவூதி அரேபியாவில் ஜனநாயகத்திற்காக பிரச்சாரம் செய்யும் தேசிய சட்டமன்றக் கட்சியின் பொதுச் செயலாளர் யஹ்யா அசிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

2011-2012 ஆம் ஆண்டுக்கு இடையில் அதிருப்தியாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது சித்திக் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, தனது முன்னாள் கணவர் அப்துல்ரஹ்மான் உமருடன் 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் புகலிடம் பெற்றார் அலா அல்-சித்திக்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அவர் கவனம் செலுத்தினார்.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டைச் சேர்ந்த சித்திக், ஆரம்பத்தில் கட்டாரில் உமருடன் அரசியல் தஞ்சம் கோரினார். அங்கு அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்பு உறவினர்களுடன் வசித்து வந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52