உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணிநேரங்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல்படுததப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் முடிவுகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின் படி, மொத்த உரிமம் மற்றும் உற்பத்தியாளர்களின் மொத்த பங்குகளை விநியோகிக்க அனுமதி வைத்திருப்பவர்களுக்கு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் உணவகங்கள், ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், ஓய்வு இல்லங்கள், சினிமாக்கள் மற்றும் உரிமங்களுடன் கூடிய கிளப்புகளில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது.

மதுபான சாலைகளை திறந்து வைத்திருக்கும் போது அவசியம் சுகாதார வழிகாட்டல்கள் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் அமுல்படுத்தாத மதுபான விற்பனை நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலல் திணைக்களம் தெரிவித்துள்ளது.