ஆளுந்தரப்புக்கள் இழுபறி ! ஜனாதிபதி , பிரதமர்  தலைமையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இன்று முக்கிய சந்திப்பு

21 Jun, 2021 | 07:40 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய மக்கள் சக்தியினர்  எரிபொருள் விலையேற்றத்தை சுட்டிக்காட்டி வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ள நிலையில்  ஜனாதிபதி , பிரதமர் மற்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று  மாலை ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ள து . 

ஜனாதிபதி தலைமையில் இடம்  பெறும் இப்பேச்சுவார்த்தையில் போது  அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எதிர் தரப்பினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரரணை, பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்  கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலை குறித்து  ஆராயப்படவுள்ளன.

  எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து  வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கும்,,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பொதுச்செயலாளர்  சாகர காரியசவததிற்கும்  இடையிலான முறுகல் நிலை காரணமாக ஆளும் தரப்பிற்குள் இரு வேறுப்பட்ட  குழுக்கள் உருவாகியுள்ளன.

எரிபொருள் விலை  கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதுகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில்  பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் பொருளாதார  ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான நிலையில் எரிபொருளின் விலை அதிகரித்தமை  பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடு,

 எரிபொருள் விலையேற்றத்தை  பொறுப்பேற்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில  உடனடியாக பதவி விலக வேண்டும் என அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின்  பொதுச்செயலாளர் சாரக காரியசம்  அறிக்கை வெளியிட்டார்.

  எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை தான் தனித்து எடுக்கவில்லை.  ஜனாதிபதி  , பிரதமர் மற்றும்  வாழ்க்கை  செலவு தொடர்பிலான   அமைச்சரவை உபகுழுவின்   தீர்மானத்திற்கு அமையவே  எரிபொருள் விலை  அதிகரிக்கப்பட்டது. ஆகவே தான்  பதவி  விலக வேண்டிய தேவை கிடையாது என  வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு பதிலளித்தார்.

 எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பல  பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன், பல சேவைகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டன.  எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினர் சுகாதார  அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள்.

அமைச்சர் உதய கம்மன்பில  பதவி விலக வேண்டும் என  பொதுஜன பெரமுனவிற்கு  பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீ லங்கா  சுதந்திர பொதுஜன பெரமுனவின்  கூட்டணியின்  பிரதான 8 பங்காளி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டார்கள்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்க்ப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பட்டமை பொருத்தமற்றது என ஆளும் தரப்பின் ஒரு சிலரும், எரிபொருள் விலை  பொருளாதார காரணிகளை கருத்திற் கொண்டு அதிகரிக்கப்பட்டது என  ஆளும் தரப்பின் பிறிதொரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய  பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டது. இவ்வாறான நிலையில்  எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினை  சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியினர் அமைசசர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளார்கள.

 அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு  அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆதரவு வழங்குகின்றன  நிலையில்  பொதுஜன  பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியசத்திற்கு   ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் பொதுஜன பெரமுனவின்  பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து இவ்விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

மக்களின் அரசியல் சிந்தனையை திசைதிருப்பும் நோக்கில் எரிபொருள் விலையேற்றத்தை கொண்டு அரசாங்கம் அரசியல்  நாடகமாடுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியினர் குற்றஞ்சாட்டினர். எரிபொருள் விலை அதிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்கள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக  கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என  எதிர் தரப்பினர் ஆளும் தரப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

பொதுஜன பெரமுனவிற்கும், ஆளும்  தரப்பின் கூட்டணிக்கும் இடையிலான முரண்பாடு மற்றும்  அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27