மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் வைத்து 50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது 1000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு மாத்திரையினதும் பெறுமதி 4500 தொடக்கம் 5000 வரை என சுங்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த மாத்திரைகள் அடங்கிய பொதி அஞ்சல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரின் பெயருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.