வவுனியா சுந்தரபுரம் பகுதியில் மதுபோதையில் நின்ற நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் பெண் மீது தாக்குதல். | Virakesari.lk

குறித்த சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. சுந்தரபுரம் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் மதுபோதையில் உள்நுழைந்த நபர்கள் அங்கிருந்த பெண்களின் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒரு பெண் சிறு காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.