(இராஜதுரை ஹஷான்)

 

கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாடு மற்றும்  அரசாங்கத்தின்  ஏனைய செலவினங்களுக்கு தேவையான 20 ஆயிரம் கோடி ரூபா நிதியை பெற்றுக் கொள்வதற்கான குறை  நிரப்பு பிரேரணை நாளைமறுதினம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

Articles Tagged Under: இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் | Virakesari .lk

கொவிட்-19 தடுப்பூசி பெறல்,  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கவும்  இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என  நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதுவருட கொவிட் கொத்தணி காரணமாக  நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டது இதன் காரணமாக அனைத்து சேவை துறைகளிலும்  முடக்கல் நிலை ஏற்பட்டது. இதனால் அரசாங்கம்  பொருளாதார ரீதியில்  நெருக்கடிகளை எதிர்க் கொள்ள நேரிட்டுள்ளது.

கொவிட்-19 கடுப்பூசி பெறல், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், அரசாங்கத்தின் ஏனைய செலவினங்களுக்காகவும் 20 ஆயிரம் கோடி ரூபா  நிதியை பெறும் குறை  நிரப்பு பிரேரணை  நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

புதுவருட கொவிட் கொத்தணியால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு 5000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தற்போதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எம்.. வி. பேர்ல் கப்பல் தீ விபத்தினால்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி கைத்தொழில் சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய  பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  எரிபொருளின் விலை தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்த 21 மாத காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது இதன் காரணமாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இதனைகுறுகிய  அரசியல் தேவைக்காக  எதிர் தரப்பினர் தற்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள்  என்றார்.