நாட்டில் கொரோனா தொற்று பரவலினால் ஒரு வருடமாக கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ள நிலையில் சவால்களுக்கு மத்தியில் சைவ மங்கையர் வித்தியாலயம் தொழிலுட்பங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் மற்றம் பிள்ளைகளின் நுண்ணறிவுத் தினை வெளிக்கொணரும் வகையில் நிகழ்நிலைக் கல்வி செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
கொரோனா தாக்கத்தால் கடந்த பல மாதங்களாக உலகமே முடங்கியுள்ள அவலநிலை. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்கள் மட்டுமே இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று முழுதாக ஒருவருடம் முடிவடைந்து சில மாதங்களும் ஆகிவிட்டன.
ஊரடங்காலும் பயணத்தடைகளாலும் பாதிப்படைந்த ஒரு முக்கிய விடயம் கல்விச் செயற்பாடுகள்.
இதற்குத் தீர்வாக நிகழ்நிலைக் கல்வி என்ற புதிய கல்வி முறை அவதாரம் எடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் நிகழ்நிலைக் கல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இந்தக் கல்விமுறை ஆசிரியர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் சரி புதிய முறைதான். இரண்டு பக்கத்திலும் தடுமாற்றங்கள் உண்டு.
நடுத்தர வயது ஆசிரியர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் புதிது. ஆசிரியர்களும் இணையவழியில் பாடம் நடத்த பழக வேண்டி உள்ளது.
இக்கால மாணவர்களுக்கு எளிது தானே நிகழ்நிலைக் கல்வி என்று நினைக்கலாம். ஆனால் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
பல நன்மைகள் இருந்தாலும் சில இன்னல்களும் உள்ளன. வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கேட்கும்போது அமைதியான சூழல் நிலவும். வகுப்பில் குறிப்புகள் எடுத்து கவனத்துடன் இருக்கலாம்.
ஆனால், வீட்டில் அப்படி இருக்காது. ஏதாவது ஒரு சத்தம் வந்துகொண்டே இருக்கும். சில செயலிகளில் மாணவர்கள் தாங்கள் வீடியோ இல்லாமலேயே வகுப்பில் இருக்கலாம்.
அப்பொழுது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்று ஆசிரியர்களால் கண்காணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
மிக முக்கிய பிரச்சினை இணையம் அவ்வப்போது துண்டிக்கப்படுவது. ஆசிரியருக்கோ மாணவருக்கோ இந்தப் பிரச்சனை நடப்பதால் வகுப்புகளைக் கவனிப்பதில் இடைஞ்சலாக உள்ளது. பெற்றோர்களின் அறியாமையை சில மாணவர்கள் தவறாக பயன்படுத்தும் ஏது நிலைகளும் உண்டு.
ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பதைப்போல நிகழ்நிலை வகுப்புகளுக்கும் நன்மையும் தீமையும் இருக்கத்தான் செய்கின்றன.
காலத்திற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. அனைவரும் தொழில்நுட்ப மாற்றத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். இணையவழி வகுப்புகளே இன்றைய “நியூ நார்மல்'.(புதிய மாற்றம்).
இந்தப் புதிய மாற்றத்தில் சைவமங்கையர் வித்தியாலயமும் இணைந்து கொண்டது. அதிபரின் தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையினாலும் வழிநடாத்தலிலும் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து மிக நேர்த்தியாக நடைபெற்று வருகின்றன.
அவரது வழிநடாத்தலில் நிகழ்நிலைக் கல்வியின் பயனை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெறுமனே கற்பித்தல் நடவடிக்கைகளுடன் மட்டும் நின்று விடாது இணைப் பாட விதானங்களிலும் நிகழ்நிலைச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் அதிபர் அவர்களால் சிறப்பாக வழங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பல கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை இணைய வழியில் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதாவது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான இணைப்பாட விதான செயற்பாடுகள் அனைத்தும் வலையொளியூடாகவும் (youtube), முகப்புத்தகத்தினூடாகவும் (facebook) நடைபெற்று வருகின்றன.
இடைநிலை மற்றும் உயர்தரப் பிரிவு மாணவர்களது இணைப்பாட விதான செயற்பாடுகள் அனைத்தும் ‘சூம்’ செயலி மூலமாகவும் நடைபெற்று வருகின்றன.
பிள்ளைகளிடம் பலவிதமான நுண் அறிவுகள் மறைந்து காணப்படுகின்றன. அவை கற்றல் செயற்பாடுகள் ஆகலாம் அல்லது விளையாட்டு அல்லது சங்கீத, நடன ஆற்றல் இவ்வாறாக வெவ்வேறு வகையான நுண்ணறிவுகள் அவர்களிடம் மறைந்து காணப்படுகின்றன.
அவற்றையும் நாம் வெளிக்கொணர வேண்டும். அவற்றைத் தான் நாம் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
இது குறித்து அதிபர் குறிப்பிடுகையில்,
“ இந்தக் கால கட்டத்தில் இணைப்பாட விதான செயற்பாடுகளை வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றோரின் துணையுடன் ஆசிரியர்களின் வழிகாட்டல்களுடன் பிள்ளைகளின் வெளிப்பாடுகள், திறமைகளை இவ்வாறு நிகழ்வுகள் மூலம் ஒழுங்குபடுத்தி நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது ஆரம்பப்பிரிவிற்குரிய 3 ஆவது நிகழ்வு. இவ்வாறு நாம் உயர் தர பிள்ளைகளுக்கும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதனை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக நடத்திக் கொண்டு வருகின்றோம்.
ஆரம்பப் பிரிவுக்கு மாத்திரம் சூம் மற்றும் பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்காட்டி பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்தவாறு அவர்களின் திறமைகளை பார்த்து மகிழும் வண்ணம் அமைந்திருப்பதுடன் இவ்வாறான கொரோனா பெருந்தொற்று நிலையிலும் நாம் இவ்வாறு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தோம் என்று எதிர்காலத்திலும் நனைத்துக் கொள்வார்கள்” என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM