சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி1 இலங்கை கழகத்தின் அனுசரணையில் கொழும்பு தேசிய சிறுநீரகவியல் ஊடுபகுப்பு மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நிலையத்திற்கு சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை கையளிக்கும்  நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. 

இந்த நிகழ்வில் லயன் சுனில் வட்டவல, மாவட்ட கவர்னர் லயன் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.ராஸிக், லயன்  அனோமா, லயன் லக்‌ஷ்மன் விஜேசிங்க, செயற்திட்டத் தலைவர் லயன் ரொஹான் குணதிலக மற்றும் லயன் மகேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படம்.

: ஜே.சுஜீவகுமார்