ஒடிசா மாநிலத்தில் கேலி செய்த ஆசிரியரை இரு மாணவிகள் அடித்து உதைத்துள்ளனர். 

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழக மாணவிகளை அங்குள்ள தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கேலி செய்துள்ளார். 

அதில் கோபமடைந்த இரு மாணவிகள் ஒன்று சேர்ந்து, குறித்த ஆசிரியரை மண்டியிடச் செய்து அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.