வவுனியா கோவில்குளம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவரை காணவில்லை என அவரது குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகவீனமடைந்திருந்த குறித்த முதியவர் வீட்டில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார். எனினும் பலநாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் யாழ் நல்லூர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் நல்லூர், மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 66 வயதான அன்ரன் விஐயகுமார் என்ற முதியவரே காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் (0778934366, 0779588590) குறித்த தொலைபேசி இலக்கங்களிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.