நாளை முதல் விடுவிக்கப்படவுள்ள, தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள் இவை தான்

Published By: Digital Desk 4

20 Jun, 2021 | 07:34 PM
image

நாட்டில் தனிமைப்படுத்தலில் உள்ள பல பகுதிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாகவும் சில பகுதிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கல்முனையில் தனிமைப்படுத்தல் தளர்வு | Virakesari.lk

அதன்படி, நாளை (21) அதிகாலை 04 மணி முதல் 12 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, தெமட்டகொடை – ஆராமய ஒழுங்கையின்  66 ஆவது தோட்டம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத்தடை கட்டுப்பாடுகளுடன் நாளை தளர்த்தப்படுகின்ற போதிலும், நாளை அதிகாலை நான்கு மணியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் 12  மாவட்டங்களை சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுதல் பகுதியாக தொடர்ந்தும் முடக்கவுள்ளதாக கொவிட் செயலணியின் பிரதான இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் அச்சுறத்தல் நிலைமைக்கு மத்தியில் நாளைய தினம் பயணத்தடை கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுகின்ற நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளபிரதேசங்களை முடக்கத்திற்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் மியகம பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட யதிஹென, மீகாவத்த பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட சியம்பலாபேவத்த,கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட நேஹென பிரதேசமும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட நவ வளதபிடிய கிராமம், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட ஏறாவூர் இரண்டு 191வது கிராம சேவகர் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட தபனே, இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலந்தகல கிராம சேவகர் பிரிவுக்கு உற்பட்ட முல்லிகந்த தோட்டம், கொதல ஆகிய பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மஹா வஸ்கந்துற தெற்கு, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மின்னேரிதன்ன சுனாமி கிராமமும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட சாவற்காடு, மாத்தளை மாவட்டத்தில் மகாவெல பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட தெமதஓயா, நிககொள்ள, நிககொள்ள வடக்கு, லக்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கியுலவத்த , குருவேல ஆகிய பகுதிகளும், புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மறக்கலகம, நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கரோலினா தோட்டம் கடுவள வத்த பகுதியும், காலி மாவட்டத்தில் இந்துருவ பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கோணகல கிராம சேவகர் பிரிவுக்கு உற்பட்ட பொல்துடுவ கிராமம், மாத்தறை மாவட்டத்தில் வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பலன கிழக்கு, கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட அரமய பகுதி 66வது தோட்டம் ஆகிய பகுதிகளை இன்று கலை நான்கு மணியில் இருந்து தனிமைப்படுத்தல் பிரதேசமாக தொடர்ந்தும் நீடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மக்கள் அனாவசியமாக கூட்டங்கூடுதல், நிகழ்வுகளை நடத்துதல், அனாவசிய பயணங்களை மேற்கொள்ளுதல்,மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ளுதல் போன்றவை முழுமையாக தடுக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார வழிமுறைகளை கையாண்டு மக்கள் செயற்பட வேண்டும் எனவும், 12 மாவட்டங்களில்  ஏற்கனவே தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பல பகுதிகள் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19