(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் நம்ப முடியாத நிலை உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவின்த டி சொய்சா தெரிவித்தார்.

கொரேனா தொடர்பில் தொற்றுநோயியல் ஆய்வு பிரிவு தற்போது சமர்ப்பிக்கும் தரவுகள் சரியான தரவுகள் அல்ல. கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை தொடர்பில் பிழையான  தரவுகளே சமர்ப்பிக்கப்படுகின்றன. 

அதனால் தொற்றுநோயியல் ஆய்வு பிரிவு பிரதானி உட்பட அதன் முன்னணியில் இருப்பவர்களை நீக்கிவிட்டு, செயற்திறமையான அதிகாரிகளை நியமிக்கவேண்டும்.

மேலும் நாட்டில் கொவிட் தொற்று நிலைமை எவ்வாறு என்ற சரியான தரவுகள் நாட்டு மக்களுக்கு தெரியாத நிலைமையிலயே நாளை பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

சரியான தரவுகள் இல்லாமல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் எவ்வாறான நிலை தோன்றும் என்பதை எங்களால் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.