'பேர்ள் கப்பல்' விட்டுச்செல்லும் சுவடுகள்: ஒரு கடலாமையின் கருணை மனு..!

Published By: J.G.Stephan

20 Jun, 2021 | 02:26 PM
image

(எம்.மனோசித்ரா)

'உடல் முழுவதும் ஒரு எரிவுடன் கூடிய மாற்றம். வயிற்றுக்கும் தொண்டைக்குழிக்கும் இடையில் உருண்டைகளின் போராட்டம். சுவாக்குழாய் இடைத்து முச்சும் திணருகிறது. கடல் நீரின் மேலே வாயை திறந்தப்படி கரையொதுங்குகின்றேன்...'

பல தசாப்தங்களாக இங்கு தான் வாழ்கின்றேன். இதைப்போன்றதொரு அதிக உஷ்னத்தை ஒருநாளும் உணர்ந்ததில்லை. உடலில் எரிவு , பருகும் நிரில் இயற்கைக்கு மாறான சுவை. என்ன நடந்ததென புரியாமல் ஆழ்கடலிலிருந்து சற்றே மேற்பரப்பிற்கு வந்து பார்த்தேன். கடலில்பாரிய கட்டடம் போலவொன்று தீபற்றி எரிந்து கொண்டிருந்தது. என்னவென ஊகிக்க முன்னரே என்னுள் ஏதோ மாற்றம். கரையை நோக்கி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கடல் ஆமை  நான்.  

என்னுயிர் பிரியும் முன் உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். நூற்றாண்டு ஆயுளை அந்த இறைவன் என் இனத்திற்கு வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த நூறாண்டுகளும் வாழ வேண்டுமாயின் எங்கள் இனத்தை விருத்தி செய்ய 35 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். கடல் ஆமைகளான நாங்கள் முட்டையிடும்  பருவத்தை  அடைய 35 ஆண்டுகள் செல்லும். அதன் பின்னரே  எம் அடுத்த சந்ததியைக் காண வாய்ப்பு கிட்டும்.  

ஆனாலும், எல்லா இடங்களிலும் சென்று நாங்கள் முட்டையிடுவதில்லை. மிகத்தூய்மையான இடங்களையே அதற்காக தெரிவு செய்வோம். தூய்மையான இடம் கிடைக்கும்வரை தேடித்திரிவோம். பின் எம் சந்ததியைக் காண ஆர்வமாய் காத்திருப்போம். இதே வழமையில் இத்தனை ஆண்டு காலமும் கடல் என்ற கண்ணுக்கு தென்படும் சொர்கத்தில் மிக ஆனந்தமாக வாழ்நாட்களை கழித்து வந்தோம்.

இன்று எங்கிருந்தோ வந்த அந்த கப்பலால் அத்தனையும் மாறிப்போனது. கடலில் தீப்பற்றிய கப்பலால் நான் உட்பட என் இனத்து நண்பர்கள் பலரும் தீக்காயங்களுக்கு உள்ளானோம். நீரில் நீந்திச் செல்லக் கூடிய திறன் அற்றுப்போனது. எம்மை எம்மால் கட்டுப்படுத்த முடியாது உடல் சமநிலையை இழந்தோம்.  அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு பாறைகளில் மோதினோம். எமது பாதுகாப்பு கவசமான ஓடுகள் சிதைந்தன. முச்சு திணறியது. என்ன நடக்கின்றதென அப்போதும் புரியவில்லை.

மீன்களின் முட்டைகளையும் சிறிய மீன்களையுமே உணவாக உட்கொள்வோம். அன்றும் மீன்முட்டைகள் பல  ஆயிரக்கணக்கில் ஒரு இடத்தில் மட்டுமல்ல. கடல் முழவதும் பரவிக் கிடந்தன.  உண்மையில் அது மீன்முட்டை  இல்லை என என் இரைப்பையில் சிக்கிக்கொள்ளும் வரை எனக்கு தெரியாது.  ஒரே தடவையில் அளவுக்கதிகமான உணவைக் கண்ட ஆனந்தம். என் நண்பர்களுடன் அவற்றை உட்கொண்டேன். உணவு உண்ட சிறிது நேரத்தில் என்னால் சுவாசிக்க முடியவில்லை. தொண்டைக்குழிக்குள் ஏதோ இறுகியதைப் போன்றிருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்குழிக்கும் இடையில் வழமைக்கு மாறானதொரு போராட்டம்.

தண்ணீர் அருந்தியும் மாற்றமில்லை. தாகத்திற்கு அருந்திய தண்ணீர் கூட நஞ்சாகிக் கிடக்கிறது. சுவாசிக்க முடியாததால் வாயைத் திறந்தபடியே கரையை நோக்கி மிதக்கின்றேன். கரையை சென்றடைய முன்னர் என்னுயிர் பிரிந்துவிடும் என உணர்கிறேன். என்னுயிர் பிரியப்போகிறதே என்ற கவலை இல்லை . என் நண்பர்கள் பலரும் என்னைப்போல் வலியை அனுபவித்து இறந்துவிட்டார்கள். 35 வருடங்கள் காத்திருந்து நான் இட்ட முட்டைகளைக் காணவில்லை. என் சந்ததிதியை நினைக்கும் போது தான் வலிக்கிறது.  

இயற்கையாக உருவாகிய எம் இனத்தின் அழிவிற்கு தெரிந்தே வாய்ப்பளித்து விட்டீர்களா மனிதர்களே? நினைவில் கொள்ளுங்கள் உங்கள் இனத்தைப் போன்று 10 மாதங்களில் எம்மை உருவாக்கி விட முடியாது. சென்று எம் வாழ்விடங்களை தூய் மைப்படுத்துங்கள். எஞ்சியுள்ள என் இன நண்பர்கள் முட்டையிட விரும்பக் கூடிய சூழலை மீண்டும் உருவாக்குங்கள். இறந்து போன எம் இனத்தின் இடைவெளியை நிரப்ப இன்னும் மூன்று தசாப்தங்கள்காத்துக் கிடக்கப் போகிறீர்கள். மனித இனம் எத்தனையோ பயனுடைய தொழிநுட்பங்களை கண்டுபிடித்திருக்கிறது. அத்ததனையும் எம் இனத்தை காப்பாற்றுவதில் தோல்வி கண்டுள்ளது.

இறைவன் கொடுத்த சகாப்த ஆயுளையும் குறைக்க முடியும் என்று மனிதன் நிரூபித்துவிட்டான். பிளாஸ்டிக் மாசு துணிக்கைகளை உணவென எண்ணி உட்கொண்டது எங்கள் தவறல்ல. இன்று எமது அழிவிற்கு இந்த துணிக்கைகளும், கடல் நீரில் கலந்த இரசாயனங்களும் காரணமாகின. எதிர்காலத்தில் கடலுக்குள்  உங்களால்  கைவிடப்பட்டுள்ள அத்தனையும் எம் இனத்தின் அழிவிற்கும் என்னைப்போன்ற ஏனைய கடல்வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் காரணமாய் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படிக்கு பிரியமுடன் ஆமை !

' பேர்ள் கப்பல் தீ விபத்தின் பின்னர் 4 வகை இனங்களைச் சேர்ந்த 75 இற்கும் அதிகமான கடல் ஆமைகள் இது வரையில் இறந்து கரையொதுங்கியுள்ளன. இவற்றின் உடலில் அபாயம் மிக்க இரசாயன பதார்த்தத்தால் ஏற்பட்ட தீக்காயங்கள், இரத்த கசிவுகள்காணப்படுகின்றன. இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களமே பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அந்த அறிக்கையை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. வனஜீவராசிகள் திணைக்களமும் அதனை அறிவிக்கவில்லை'

- துஷான் கப்புருசிங்க - கடலாமை ஆய்வாளர்-  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13