தெனியாய பகுதியில் வைத்தியசாலைக்கு சென்ற நபரொருவர் மீது பஸ் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பஸ்ஸில் இருந்து இறங்கி வைத்தியசாலைக்கு செல்ல பாதையை கடந்த போது குறித்த பஸ் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 65 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.