தாய்லாந்து மன்னரின் நாயை குறித்து பேஸ்புக்கில் கிண்டல்  செய்ததற்காக அந்நாட்டு பிரஜை ஒருவருக்கு தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, 37 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் குறித்த நபர் எவ்வாறான பதிவை மேற்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

தாய்லாந்து நாட்டின் தற்போது மன்னராக பூமிபால் அதுல்யாதெச் என்பவர் இருந்து வருகிறார். அங்கு மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பவர்களுக்கு குறைந்தது 15 வருட சிறை தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.