பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்

Published By: Vishnu

20 Jun, 2021 | 01:23 PM
image

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு உத்தரவுகளை குறைந்தபட்சம் ஜூன் 28 வரை நீட்டிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் வலியுத்தியுள்ளனர்.

ஜூன் 21 முதல் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு தழுவிய பயணக் கட்டுப்படுகளை நீக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது கவலைளிப்பதாகவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடு இன்னும் அன்றாடம் 2000 க்கும் மேற்பட்ட புதிய கொவிட் பதிவுகளையும் 50 உயிரிழப்புகளையும் பதிவு செய்து வருகின்றது. இந் நிலையில் அரசாங்கத்தின் மேற்கண்ட தீர்மானம் மேலும் சிக்கலை தோற்று விக்கும்.

கொவிட்-19 வைரஸின் டெல்டா மாறுபாடு சமூகத்தில் பரவலாக இருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. இந்த மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தும் மாறுபாட்டை விட ஐம்பது சதவீதம் அதிகமாக பரவக்கூடியது.

முடக்கலின் தளர்வு ஒரு சில நாட்களில் பரவலலான ஆபத்தான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதுடன், புதிய மாறுபாட்டின் பரவல் மூலம் முன்னோடியில்லாத அளவிற்கு கொவிட் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வடையும் என்றும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:03:15
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51
news-image

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களால் வீதி...

2025-03-27 10:33:06