கொவிட் -19 க்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த 'கீர் பவானி மேளா' அனுஸ்டிப்பு

By J.G.Stephan

20 Jun, 2021 | 01:02 PM
image

மத்திய காஷ்மீரின் காண்டர்பால்  மாவட்டத்தின் துல்முல்லா பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறம் 'கீர் பவானி மேளா' இடம்பெற்றது. கொவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் பெருந்தொகை மக்கள் கூட்டங்கள் இன்றி இந்த அனுஸ்டிப்புகள் இடம்பெற்றன.

இருப்பினும், சிலர் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.  துல்லமுல்லா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவியின் கோவிலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் சுகாதார முறைகளை பின்பற்றி திரண்டனர்.

தெய்வத்தின் புனித சடங்குகள் மற்றும் ஆரத்தி ஆகியவை கோவிலில் குருக்கள் பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டன. இந்த மத சடங்கினை சமூக ஊடகங்கள் மூலம் கோவிலுக்கு வரமுடியாமல் போன பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக  அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேளாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றதாக துல்முல்லா - காண்டர்பால் துணை ஆணையர் கிருத்திகா ஜோத்ஸ்னா தெரிவித்தார்.

கொவிட் -19 கட்டுப்பாட்டு சுகாதார வழிமுறைகளின்படி, கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் உச்சவரம்பு காணப்பட்டதுடன், கீர் பவானி ஆலயத்தின் விவகாரங்களை நிர்வகிக்கும் தர்மத் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கும் இந்த விடயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

துல்லமுல்லாவில்  உள்ள ரக்னியா தேவி  கோயில்  வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் தோறும் வருகை தருவார்கள். பல தசாப்தங்களாக, கீர் பவானி கோயிலின் வட்டாரத்தில் உள்ள முஸ்லிம்கள் மலர் விற்பணை மற்றும் பிற பிரசாதம் பொருட்கள் உள்ளிட்ட  அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதால், மேளா இன நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

எனினும் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 25 திகதி வாந்தாமா கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 23 பண்டித் குலத்தவர்களை கொன்றனர். இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்தர்களின் வருகை குறைந்தது. ஆனால் 2003 க்குப் பிறகு வருடந்தோறும்  திருவிழாவிற்கு வருகை  தரும் பக்தர்களின்  எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

1989 ல் காஷ்மீரில் கிளர்ச்சி ஏற்பட்டயடுத்து 1990 ஆம் ஆண்டில் சுமார் 55,000 பண்டித் குல குடும்பங்கள் தங்கள் மூதாதையர் வீடுகளை விட்டு வெளியேறி நாட்டின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.  இவ்வாறு அவர்கள் குடிபெயர்ந்த பின்னர் வருடத்திற்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right