பிறந்து 8 நாட்களேயான குழந்தையுடன் தெருவில் நிர்க்கதியான பெற்றோர்: உதவிக் கரம் நீட்டிய இராணுவ சிப்பாய்கள்..!

Published By: J.G.Stephan

20 Jun, 2021 | 01:05 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தற்போது நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளதால், தமது அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வதற்கும் மீண்டும் வீட்டுக்கு திரும்புவதற்கும் பெரும் துன்பத்தை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் இவர்கள்  நடந்து சென்‍றே தமது தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.  

இந்நிலையில், இவை அனைத்தையும் விடவும் மிகவும் துயரமான சம்பவம் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இளம் வயது தாயும் தந்தையும் பிறந்து  எட்டு நாட்களேயான கைக்குழந்தையுடன் ஆமர்வீதி சந்தி வீதியோரமாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போக்குவரத்துக்காக வாகனமொன்றை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், இராணுவ வேன் வண்டியொன்று அவர்கள் அருகே வந்து நின்றுள்ளது. அதனையடுத்து, அதில் வந்த மூன்று இளம் இராணுவ சிப்பாய்கள் வேனிலிருந்து இறங்கி அவர்களுடன் கதைக்க ஆரம்பித்த நிலையிலேயே அவர்களின் விபரம் தெரியவந்துள்ளது. 

அவர்களின் குழந்தைக்கு 8 நாட்களாகுவதாகவும், அவர்களின்  ஊர் நிட்டம்புவ என்றும், அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கு  வாகனம் ஒன்றுக்காக காத்துக் கிடப்பதாக தெரிவித்தனர். மிகவும் அவல நிலையுடன் முக வாட்டத்துடன்  காணப்பட்ட  அவர்களை பார்ப்பதற்கே பெரும் பரிதாபமாக, அதுவும் அந்த பிஞ்சுக் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தமை பெரிதும் வேதனையளிக்கக்கூடிய விடயமாகவிருந்தது.

நீங்கள்  கொழும்பு வந்ததற்கான காரணம் என்ன? எப்படி வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டதற்கு, எமது குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றும் சிகிச்சைக்காக கொழும்பு  சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு (நோனா வார்ட்) எமது ஊரிலிருந்து அம்புயுலன்ஸ் வண்டி மூலமாக வந்தோம்.  சிகிச்சை முடிந்து ஊர் செல்வதற்கு முடியாது தவித்திருந்தபோது, முச்சக்கர வண்டி ஓட்டுநர், தான் மட்டக்குளி நோக்கி பயணிப்பதாகவும்,  ஆமர் வீதி சந்தியில் அதிகமான வாகனங்கள பயணிக்கும், அங்கிருந்து ஏதேனும் வாகனம் உங்களது  ஊருக்கு  போக முடியும் என கூறி  இந்த இடத்தில் (ஆமர் வீதி சந்தி) எங்களை இறக்கிவிட்டார் எனக் கூறினர்.

இவர்களுக்கு  உதவி செய்யும் முகமாக இராணுவ வீரர்கள் ஏதேனும் வாகனங்கள்  அந்த வழியாக செல்லுமா என வீதியில் சென்ற வாகனங்களை நிறுத்திக் கேட்டனர். இவ்வாறு 10 நிமிடங்களுக்குப் பின்னர் , இந்தப் பக்கமாக கபில நிற சிறிய ரக லொறியொன்று வந்தது. வாகனத்தை வழிமறித்து அதிலிருந்த சாரதி மற்றும் உதவியாளரிடம் சம்பவத்தைக் கூறி உதவி கேட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க பக்கமாக  செல்வதாகவும், மினுவங்கொடையில் இறக்கி விடுகிறோம் என ஆரம்பத்தில் கூறியிருந்தபோதிலும், அந்த பிஞ்சுக்குழந்தையினதும், இளம் தாயின் நிலை அறிந்தும் அவர்களை நிட்டம்புவையிலுள்ள அவர்களின் வீட்டுக்கே சென்று இறக்கிவிடுவதாக தெரிவித்து்ளளனர். 

இந்நிலையில், சாரதி ஆசனத்துக்கு அருகிலுள்ள ஆசனத்தில், தாயுடன் பிஞ்சுக் குழந்தையை ஏற்றிவிட்டு, வாகன உதவியாளர் , குழந்தையின் தந்தை இருவரும் பின்பக்கமாக ஏறி  அமர்ந்துக்கொண்டனர். அவர்களுக்கு இராணுவ சிப்பாய்கள்  பண உதவிகளை வழங்கியதுடன், அறிவுரைகளையும் கூறினர். இராணுவ சிப்பாய்களுக்கு கண்ணீர்  கலந்த நன்றிகளை தெரிவித்ததுடன், அந்த லொறி அவ்விடத்தை விட்டு சென்றதும், இராணுவ சிப்பாய்களும் தங்களது வாகனத்தில் ஏறி சென்றனர்.

நாட்டில் இவ்வாறான துயரமான சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று கொண்டுள்ளமையும் கருத்திற்கொள்ளப்படவேண்டியவையே...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39
news-image

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர்...

2024-10-05 15:18:19