அமெரிக்க - மெக்ஸிகோவின் எல்லை நகரமான ரெய்னோசாவில் சனிக்கிழமையன்று பல வாகனங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.

பரவலான பீதியை ஏற்படுத்திய இந்த வன்முறையில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சட்ட அமுலக்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டெக்சாஸின் மெக்அலன் எல்லையில் உள்ள நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பல சுற்றுப்புறங்களில் இந்த தாக்குதல்கள் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பாலம் அருகே பொலிசார் நடத்திய தாக்குதலின் போது ஒருவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றவர்கள் சீரற்ற தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த துப்பாக்கிச் சூடு இராணுவம், தேசிய காவலர், அரச காவல்துறை மற்றும் பிற அமைப்புகளை அணிதிரட்டியது.