கிண்ணியாவில் எட்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு

Published By: Vishnu

20 Jun, 2021 | 09:39 AM
image

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் எட்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நன்னி, கண்டல்சாடு, மணல் ஆறு, சோள வெட்டுவான், தளவாய், படுகாடு, சாவாறு, கங்கை ஆற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள கசிப்பு உற்பத்தி நிலையங்களே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த கசிப்பு உற்பத்தி நிலையங்களில் 2000 ரூபா நாள் கூலிக்கு பணியாளர்களை வேலைக்கமர்த்தி கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அக் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 26 பரல்களில் சுமார் 3000  லீட்டர் கசிப்புக்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த  8 கசிப்பு உற்பத்தி நிலையங்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கசிப்பு உற்பத்தி நிலையங்கள் வைத்திருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும்  கிண்ணியா பொலிஸர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53