உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ; இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 146/3

Published By: Vishnu

20 Jun, 2021 | 09:04 AM
image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

மழை காரணமாக நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது முதல் நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்யை தினம் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சின் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஆடுகளும் நுழைந்தனர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கிடைத்த சந்தர்ப்பத்தில் பவுண்டரிகளும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ஓட்டங்களை சேர்த்தது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 34 ஓட்டங்களில் ஜேமீசனின் பந்து வீச்சல் டிம் சவுதியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தாமர். அவரை தொடர்ந்து சுப்மன் கில்லும் 28 ஓட்டங்களுடன் நீல் வாக்னரின் பந்து வீச்சில் பிடிகொடுத்தார். 

அடுத்து வந்த பொறுமையின் சிகரம் புஜாரா 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 146 ஆக இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் போட்டி நிறைவு நேரத்துக்கு முன்பே இடைநிறுத்தப்பட்டது.

இரண்டாம் நாள் நிறைவில் இந்தியா 66.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்துள்ளது. விராட் கோலி 44 ஓட்டததுடனும், ரஹானே 29 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து சார்பில் போல்ட், ஜேமீசன் மற்றும் வாக்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கறுப்பு பட்டி அணிந்து விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49