நாட்டில் இன்று (19.06.2021) இதுவரையான காலப்பகுதியில்  2,169 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் 2,37,661 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றையதினம் 2,134 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை 1,99,393  கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 35,788 பேர் வைத்தியசாலைகளில்  தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.