இலங்கையில் கொரோனாவுக்கு இதுவரை இரண்டாயிரத்து 534 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று (18.06.2021) 54  கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று 2,134 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளார்கள்.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,99,393  ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 2,5,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 33,540 பேர் வைத்தியசாலைகளில்  தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 1,448 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.