இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

இந்நிலையில், இன்று  சனிக்கிழமை இவ்வாறு கரை ஒதுங்கிய 308 கடலாமைகள், 2 டொல்பின் மீன்களின்  உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட டொல்பின் மீன் ஒன்றும் இன்று  கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.