செ.தேன்மொழி
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு , மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் , ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று சனிக்கிழமை கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார்.
வைத்தியரின் ஆலோசனைக்கமைய சிகிச்சைக்காகவே இவர் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்ததுடன் , அவருக்கான சிகிச்சைகள் முடிவுற்றதும் , அவர் மீண்டும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM