ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 27 வயதான சந்தேக நபரை  எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 17 வயது பாடசாலை மாணவனை மாகொல சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கடுகண்ணாவையைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்று மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 27 வயதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.