போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

By Digital Desk 1

19 Jun, 2021 | 02:32 PM
image

செ.தேன்மொழி

கம்பஹா - பெம்முல்ல பகுதியில் போலி நாணயத்தாளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெம்முல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்கு வந்த நபரொருவர் 5000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி , அதற்கு பதிலாக சில்லரை காசுகளை பெற்றுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த நாணயத்தாள் போலியானது  என அறிந்துக் கொண்டுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பஹா பொலிஸார் , சி.சி.டி.வி  காணொளி காட்சிகள் ஊடாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர் பயணித்த காரின் இலக்கத்தை அறிந்துக் கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மிரிஸ்வத்த பகுதியில் வைத்தே 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த காரை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் , சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றவும் கூடாது...

2022-10-06 16:00:02
news-image

ஐநா மனித உரிமை அமைப்பின் உறுப்புநாடுகள்...

2022-10-06 15:56:27
news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48
news-image

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு...

2022-10-06 11:09:34
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும்...

2022-10-06 11:09:53