பண்டாரவளைப் பகுதியின் தோவை என்ற இடத்தில் சுமார் 15 ஏக்கர் காட்டுப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயினால், காட்டுப் பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம், விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில்,  தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.