சுதந்திர ஊடகவியலாளர் சஜீவ விஜேவீர விவகாரம்: தகவல்மூலத்தைக் கண்டறிய கோரி முறைப்பாடு - சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

Published By: J.G.Stephan

19 Jun, 2021 | 02:13 PM
image

(நா.தனுஜா)
சுதந்திர ஊடகவியலாளர் சஜீவ விஜேவீரவினால் பிரசுரிக்கப்பட்ட செய்திக்கான தகவல் மூலத்தைக் கண்டறியுமாறு கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமையானது, ஊடக சுதந்திரத்தின் மீதும் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையின் மீதும் பிரயோகிப்படும் பாரிய அச்சுறுத்தலாகும் என சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து சுதந்திர ஊடக இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சுதந்திர ஊடகவியலாளரான  சஜீவ விஜேவீர என்பவரால் நடாத்தப்படும் 'ரட்ட' என்ற இணைய ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தியொன்றின் தகவல்மூலத்தை வெளியிடுமாறுகோரி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் காலி மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில்  சுதந்திர ஊடக இயக்கம் ஆராய்ந்து பார்த்தபோது, 'கொரோனா தடுப்புப்பணியைத் தவிர்த்து, நற்பெயர் பெறும் (நியாயமற்ற அடிப்படையில்) வைத்தியர்கள்' என்ற தலைப்பில் குறித்த இணையப்பக்கத்தில் செய்தியொன்று வெளியாகியுள்ளது. அதனை சுட்டிக்காட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திநிபுணர் ஷெல்டன் பெரேரா பொலிஸ் நிலையத்தில் மேற்கண்டவாறு முறைப்பாடளித்திருக்கின்றார். குறித்த செய்தியை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த தகவல்மூலம் என்னவென்பதைக் கண்டறியுமாறு அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டிருந்தது.

இவ்வாறு செய்தியொன்றின் தகவல்மூலத்தை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதென்பது, ஊடக சுதந்திரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் அதேவேளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கும் முரணானதாகவே அமையும். இந்த முறைப்பாட்டின் மூலம்  2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் 36 ஆவது சரத்து மீறப்பட்டுள்ளது. அதுமாத்தரமன்றி குறித்த செய்தியைப் பொறுத்தவரையில் ஊடகவியலாளர் சஜீவ விஜேவீர, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடப்பபாடுகளைப் பின்பற்றியிருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதேவேளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் 40 ஆவது சரத்தின்படி, வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அளிக்கப்பட்ட முறைப்பாடானது செய்திக்கான தகவல் வழங்கும் மூலங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது காணப்படும் நெருக்கடி நிலைமையில் உயர்மட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது மிகவும் அவசியமான விடயம் என்று கருதுகின்றோம். செய்தியொன்று வெளியானதன் பின்னர் அதற்குப் பதிலளிப்பதற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஊடகவியலாளர் சஜீவ விஜேவீரவை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பதும் குறித்த செய்திக்கான தகவல்மூலம் என்னவென்பதை வெளியிடுமாறு அழுத்தம் பிரயோகிப்பதும் ஊடக சுதந்திரத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தமாகவே அமையும். அதுமாத்திரமன்றி, அது பிரஜைகள் வசமுள்ள தகவல் அறியும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய செயற்பாடுகளை நாம் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51