விடயம் பற்றி அறிவில்லையெனில் அமைதியாக இருக்கவும்: நாலக கொடஹேவாவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஆலோசணை

Published By: J.G.Stephan

19 Jun, 2021 | 01:44 PM
image

(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கடல்வாழ் உயிரிழப்பதற்கு பருவபெயர்ச்சி காலநிலை தான் காரணம் என்று இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா கூறுவதனால், கப்பல் உரிமை நிறுவனம் அல்லது காப்புறுதி நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே விடயம் பற்றி அறிவு இல்லையெனில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடல் வாழ் உயிரினங்கள் இறந்து அவற்றின் உடல்கள் கரையொதுங்குவது சாதாரண விடயமாகும் என்றும், பருவபெயர்ச்சி காலநிலையே இதற்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். இவருடைய சாதாரண நிபுணத்துவம் என்னவென்பது எமக்கு புரியவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இவ்வாறான நிபுணர்கள் தற்போது மக்களுக்கு சார்பான பேசுகின்றனரா அல்லது கடலில் மூழ்கியுள்ள கப்பல் சர்ச்சையிலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக பேசுகின்றனரா? கரையொதுங்கும் உயிரினங்களை விட அதிகமானவை கடலினுள் இறந்து கிடப்பதாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்கு இவ்வாறானதொரு பாரிய அழிவு ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இராஜாங்க அமைச்சர் நாலககொடஹேவா தெரிவித்துள்ள கருத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு கப்பல் உரிமை நிறுவனத்திடமிருந்தோ அல்லது காப்புறுதி நிறுவனத்திடமிருந்தோ கிடைக்கக் கூடிய நிவாரணமும் கிடைக்காமல் போகக் கூடும் அச்சம் எழுந்துள்ளது.

இலங்கையில் கடல்வாழ் உயிரிழப்பதற்கு பருவபெயர்ச்சி காலநிலை தான் காரணம் என்று நாலக கொடஹேவா கூறுவதனால், கப்பல் உரிமை நிறுவனம் அல்லது காப்புறுதி நிறுவனம் என்பன கப்பலால் இந்த ஆபத்து ஏற்படவில்லை என்று அறிவித்து நஷ்டஈட்டை வழங்காமலிருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

எனவே விடயம் பற்றி அறிவு இல்லாவிட்டால் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மாறாக கப்பல் விபத்து ஏற்படக் காரணமான அரசாங்கத்தை பாதுகாத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் உட்பட நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது! - பாரதி...

2025-02-13 14:12:46
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27