சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அமெரிக்காவிற்கு  சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றார். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடைந்தவுடன் அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 

கொரோனாத் தொற்றின் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளாதிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மருத்துவர்களின் அறிவுரையும் படியும் மத்திய அரசின் அனுமதியின் பெயரில் இன்று  அதிகாலையில் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து டோஹா வழியாக அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.