சீன இணைய உளவால் நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டதென சந்தேகம்

Published By: J.G.Stephan

19 Jun, 2021 | 01:33 PM
image

சீனா முன்னர் முன்னெடுத்த சைபர் குற்றங்களை விடவும் தற்போது அதிகமாகியுள்ளதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் கணணிகளுக்குள் ஊடுருவி இணையப் பாதுகாப்பு தொடர்பான சாதனத்தினை சீனாவின் ஹெக்கர்கள் சுரண்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விரைவாக தொடுக்கும் பாதுகாப்பு வலையமைப்பு சாதனங்களில் ஹெக் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமை கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் அதற்கான நோக்கம் தற்போது தான் தெளிவாகத் ஆரம்பித்துள்ளது. ஹெக்கர்கள் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோனையும் நாட்டின் மிகப்பெரிய நீர் முகவரகத்தையும் குறிவைத்ததாக அசோசியேட்டட் பிரஸ் அறிந்திருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கின் நகர சுரங்கப்பாதை அமைப்பும் பாதிக்கப்பட்டதாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் செய்தி வெளியாகியிருந்தது. 

‘பல்ஸ் கனெக்ட்  செக்யூர்’ உட்பட இதுவரை பெயரிடப்படாத டசின் கணக்கான மதிப்புடைய பிறநிறுவனங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது ஏனைய பல நிறுவனங்களும் அரசாங்கங்களும் தங்கள் வலையமைப்புக்களுக்கு பாதுகாப்பான அணுகலைப் பெறுவதற்கு முன்ணுதாரணமாகின்றன.

அதேநேரம் முக்கியமான தகவல்கள், ஏதேனும் இருந்ததன் காரணமாக ஹெக்கர்களால் மேற்படி கணணிகள் அணுகப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவாக இல்லை. சில முக்கியமான தரவு திருடப்பட்டதற்கான எந்த ஆதாரத்தினையும் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கான அணுகலில் நிச்சயமற்ற தன்மை பொதுவானது. அத்துடன் தரவு இழப்பைத் அனுமானிப்பதற்கும் பல மாதங்கள் ஆகலாம், அவ்வாறன நிலைமையொன்று கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே எந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விடயங்களை அறிய முடியும். 

ஆனால் ‘பல்ஸ் கனெக்ட் செக்யூர்’ உரிமையாளர் இவந்தி இவ்விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். முக்கியமான தகவல்கள் பெறப்பட்டமை சமரசம் செய்யப்படாவிட்டாலும், வணிக மற்றும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவுக்கு இரகசியங்களைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கக்கூடிய முக்கியமான அமைப்புகளின் வலையமைப்புக்களில் ஹெக்கர்கள் காலடி எடுத்து வைத்ததுள்ளமையானது கவலைக்குரியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“சில உயர்மட்ட அமைப்புகளுக்குள்ளும் ஹெக்கர்களின் அணுகலைப் பெற முடிந்தது, எனினும் சில வலையமைப்புக்கள் நன்கு பாதுகாக்கப்பட்டவை" என்று மாண்டியண்டின் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி சார்லஸ் கார்மகல் கூறினார், மேலும் இந்த நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் ஹெக்கிங் தொடர்பாக காணப்பட்ட அச்சுறுத்தல் குறித்த பிரசாரத்தை முதன்முதலில் விளம்பரப்படுத்தியிருந்தது.

‘பல்ஸ் செக்யூர்’ ஹெக் செய்யப்பட்டமை கவனிக்கப்படாமல் போய்விட்டது, அதேநேரத்தில் தொடர்ச்சியான தலைப்பு-அபகரிப்பு, காரணங்களை மையப்படுத்திய தாக்குதல்கள் என்பன அமெரிக்காவின்  முக்கியமான உள்கட்டமைப்பில் இடம்பெற்ற சைபர் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, எரிபொருள் குழாய் வழியாக எரிவாயு எடுத்துவரப்படுத்தல் மற்றும் எரிவாயு நிலையங்களில் பரவலான பற்றாக்குறை இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தியது. 

ரஷ்ய இணைய உளவாளிகளால் தொடங்கப்பட்ட ‘சோலர் விண்ட்ஸ் ஹெக்கிங்’ பிரசாரத்தின் பாதிப்புக்களை அமெரிக்க அரசாங்கம் தற்போதும் விசாரித்து வருகிறது, இந்த ஹெக்கிங்கும் டசின் கணக்கான தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சிந்தனை மையங்களைப் பாதித்தது. 2020இல் குறைந்தது ஒன்பது அமெரிக்க அரசு நிறுவனங்களின் பெரும்பகுதிக்குள் ஊடுருவியிருந்தது.

“அமெரிக்கா மீது உளவு பார்க்க இணையத்தைப் பயன்படுத்தியதில் சீனாவுக்கு நீண்ட வரலாறு உண்டு, அதனடிப்படையில் ஏராளமான இணைய-உளவு அச்சுறுத்தலை சீனா முன்வைக்கிறது” என்று தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் அதன் அண்மைய அச்சுறுத்தல் மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சீன ஹெக்கர்கள் அமெரிக்க மத்திய அரசின் தலைமை அலுவலகத்திலிருந்து ஊழியர்களின் மில்லியன் கணக்கான பின்னணி சோதனை கோப்புகளை திருடியிருந்தனர்.

கடந்த ஆண்டு நீதித்துறையைச் சேர்ந்த இரண்டு ஹெக்கர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கொரோனா வைரஸிக்கு தடுப்பூசிகளை உருவாக்கும் நிறுவனங்களை குறிவைத்தும், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள அறிவுசார் சொத்துக்கள் மற்றும் வர்த்தக இரகசியங்களை சீன அரசாங்கத்துடன் இணைந்து திருடியமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

அவ்வாறன நிலையில், ‘பல்ஸ் ஹெக்கிங்’ விடயத்தில் சீன அரசு தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துவிட்டது. அத்துடன் அமெரிக்க அரசாங்கம் எந்தவொரு முறையான பண்புகளின் அடிப்படையில் இவ்விடயங்களைக் கூறவில்லை என்றும் தெரிவித்துவிட்டது. 

‘பல்ஸ் ஹெக்கிங்’ விடயத்தில் அதிநவீன ஹெக்கர்கள் செயற்பட்டதாகவும் இதற்கு முன் பார்த்திராத வகையில் ஊடுருவல்களுக்கான விடயங்களை பயன்படுத்திக் கொண்டனர் என்றும், தங்களது விடயங்களுக்குள் ஒரு முறை கூட பிரவேசிக்காது மறைக்கும் முயற்சியில் மிகுந்த முனைப்புடன் இருந்ததாகவும் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறினார்.

“ஹெக்கிங் திறன் மிகவும் வலுவானது மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவது கடினமானது, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சுயவிபரம் மிகவும் முக்கியமானது" என்று பி.ஏ.ஈ. சிஸ்டம்ஸ் அப்ளைட் இன்டலிஜென்ஸின் இணையத்தின் தலைவர் அட்ரியன் நிஷ் கூறினார். “இது சில டசின் நெட்வொர்க்குகளுக்கு எதிரான மிகவும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலாகும். இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தேசிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.” என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம், அல்லது சி.ஐ.எஸ்.ஏ., ‘பல்ஸ் ஹெக்’ குறித்து ஏப்ரல் மாதத்திலேயே எச்சரிக்கையை வெளியிட்டது, “பல அமெரிக்க அரச நிறுவனங்கள், முக்கியமான உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் துறை நிறுவனங்களை பாதிக்கும்” என்பதைப் பற்றி தமது நிறுவனம் அறிந்திருப்பதாகக் கூறியது.

அதுமட்டுமன்றி குறைந்தது ஐந்து கூட்டாட்சி முகவர்களின் அங்கீகாரமற்ற அணுகலுக்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் யார் அந்த முகவர்கள் என்று அந்த நிறுவனத்தினால் கூறப்படவில்லை.

‘வெரிசோன்’ தனது ஆய்வகங்களில் ஒன்றில் ‘பல்ஸ் ஹெக்கிங்’ தொடர்பான சமரசத்தைக் கண்டறிந்ததாகக் கூறியது, அதனால் குறித்த ஆய்வகத்தினை அதன் முக்கிய நெட்வொர்க்குகளிலிருந்து தனிமைப்படுத்தியதாக குறிப்பிடுகின்றது. அத்துடன் தரவு அல்லது வாடிக்கையாளர் தகவல்கள் எதுவும் அங்கு அணுகப்படவில்லை அல்லது திருடப்படவில்லை என்று நிறுவனம் மேலும் கூறியது.

“மோசமான ஹெக்கர்கள் எங்கள் அமைப்புகளுடன் சமரசம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்" என்று வெரிசோன் செய்தித் தொடர்பாளர் ரிச் யங் கூறினார். “அதனால் தான் இணைய செயற்பாட்டாளர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனிநபர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று முன்னெச்சரிக்கை விடுத்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.

19 மில்லியன் மக்களுக்கு தண்ணீரை வழங்கும் மற்றும் உலகின் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கும் தெற்கு கலிபோர்னியாவின் பெருநகர நீர் வரையமைப்பு குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சி.ஐ.எஸ்.ஏ தனது எச்சரிக்கையை வெளியிட்டது. இதனால் ஹெக்கர்களால் சமரசம் செய்யப்பட்ட கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் அதன் செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா கிமிட்ச் அந்தக் கருவி உடனடியாக சேவையிலிருந்து அகற்றப்பட்டது. மேலும் பெருநகர அமைப்புகள் அல்லது செயல்முறைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. அறியப்பட்ட தரவு வெளியேற்றம் நிகழ்ந்திருக்கவும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார். 

இவரது கருத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், நியூயோர்க்கில் உள்ள பெருநகர போக்குவரத்து அதிகாரசபையும் அவ்விதமான தரவு வெளியேற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் எவற்றையும் காணவில்லை என்று கூறியது. எனினும், சீன ஹெக்கர்களால் “மதிப்புமிக்க தரவுகள் அல்லது வாடிக்கையாளர் தகவல்கள் திருடப்பட்டன” என்று தி நியூயோர்க் டைம்ஸ் முதலில் செய்தி வெளியிட்டது.

இவ்வாறான நிலையில் பி.ஏ.ஈ நிறுவனத்தின் பாதுகாப்பு நிபுணர் நிஷ், “பதிலடி நடவடிக்கைகளால் ஹெக்கர்கள் பல வலையமைப்புக்களாக உடைந்து போயிருக்கலாம். ஆனால் எந்தவொரு செயற்பாட்டு காரணங்களுக்காகவும் தரவுகளை உடனடியாக திருடவில்லை. இதனை அவர், ஒரு திருடன் வீட்டிற்குள் நுழைந்தாலும், அவனை வெளி மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டான்” என்று ஒப்பிட்டார்.

மேலும் ஹெக்கர்கள் சில இலக்குகளிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்கும் அறிகுறிகளைக் கண்டறிந்ததாக மாண்டியண்ட் நிறுவனத்தினர் கூறினார்கள். குறிப்பாக, முக்கியமான நிதி, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் நகராட்சிகள் உட்பட பல துறைகளில் ஹெக்கிங் செய்யப்படுவதற்கு இலக்குகளாக இருந்தன. சில இலக்குகள் ஐரோப்பாவில் இருந்த போதும் பெரும்பாலான இலக்குகள் அமெரிக்காவில் தான் காணப்பட்டன.

இவ்வாறான நிலையில் மேரிலாந்தின் மாண்ட்கோமெரி கவுண்டி, நிறுவனமானது அதன் ‘பல்ஸ் செக்யூர்’ சாதனங்கள் தாக்கப்பட்டதாக சிசாவால் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறியர், ஆனால் கவுண்டி செய்தித் தொடர்பாளர் ஸ்கொட் பீட்டர்சன், ஹெக்கர்களின் சமரசத்துக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அவர்களிடம் தவறான அறிக்கை இருப்பதாக சி.ஐ.எஸ்.ஏ.விடம் கூறினார். அதுமட்டுமன்றி சி.ஐ.எஸ்.ஏ.விடம் கவுண்டியின் அறிக்கைக்கு நேரடியாக பதிலளிக்கவுமில்லை.

பல்ஸ் செக்யூர் ஹெக்கின் புதிய விபரங்கள் தற்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றத்தின் ஏற்படுத்தியிருக்கின்றது. பைடன் சீனாவின் வளர்ச்சியை சரிபார்ப்பதை ஒரு முதன்மை முன்னுரிமையான விடயமாக ஆக்கியுள்ளார். மேலும் உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக மாற வேண்டும் என்ற சீன நாட்டின் இலட்சியம் “எனது கண்காணிப்பின் கீழ் நடக்கப்போவதில்லை” என்றும் கூறியிருக்கின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கியின் ‘பிறிக்ஸ்’ இணைவு

2024-09-15 18:17:01
news-image

பொன்சேகாவை தோளில் சுமந்த சுமந்திரனும் விக்கியும்...

2024-09-15 17:56:22
news-image

நிலைமாறும் கிளிநொச்சி: சொல்லும் சேதி!

2024-09-15 17:36:54
news-image

நாட்டின் முன்னிருக்கும் சவால்களும் ஜனாதிபதி தேர்தலும்

2024-09-15 17:39:03
news-image

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி...

2024-09-15 17:19:30
news-image

ரணிலின் வெற்றியில் தமிழ், முஸ்லிம்கள் பங்காளிகளாவர்...

2024-09-15 16:47:30
news-image

புதிய பாராளுமன்றில் இரு ஆண்டுக்குள் புதிய...

2024-09-15 17:58:09
news-image

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதில் ரணில் ஏன்...

2024-09-15 16:05:47
news-image

தமிழ் அரசின் தடுமாற்றம்

2024-09-15 15:45:40
news-image

இரண்டாவது வாக்கின் பலம்

2024-09-15 17:47:32
news-image

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகள்

2024-09-15 17:39:37
news-image

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெறும் எலும்புக்கூடு

2024-09-15 12:49:04