இராணுவ லெப்டினன் கேர்ணல் பிரதீப் குமார நிசாங்க இன்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பிரதீப் குமார நிசாங்கவின் மனைவி மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியொன்றை பத்தரமுல்லை தியவன்னாவ குளத்திலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு அத்துருகிரிய பகுதியில் வைத்து பிரதீப் குமார நிசாங்கவின் மனைவி மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.