உருக்குலைந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு 

Published By: Digital Desk 2

19 Jun, 2021 | 02:29 PM
image

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கருவப்பன் சேனையில் உருக்குலைந்த நிலையில்  யானை ஒன்றின் சடலம் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தகவல் தெரிவித்தனர். 

கருவப்பன்சேனையில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையிலேயே குறித்த யானையின்  சடலம் காணப்பட்டுள்ளது. 

அது இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கிரான் வனஜீவராசிகள் திணைக்களம் தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த 09.06.2021 ஆம் திகதியன்று குறித்த யானை இறந்துள்ளாகவும் அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை உடற் கூற்றாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. 

குறித்த பிரதேசத்தினை சுற்றிவர உள்ள  கிராமங்களான மதுரங்குளம்,கட்டுமுறிவு,குஞ்சன் குளம் போன்ற கிராமங்களில் நோய்வாய்ப்பட்டு, உடல் மெலிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அலைந்து திரிந்ததாக அதனைக் கண்ட கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குளத்திற்கு அருகாமையில் யானையின் பழுதடைந்த இறந்த உடல் காணப்படுவதனால் நீரில் அதன் எச்சங்கள் கலக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அந்த குளத்து நீரினையே தாங்கள் குடிநீர் மற்றும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். 

ஆகவே அந்த இடத்தில் இருந்து குறித்த யானையினை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் 

இதேவேளை இப் பகுதியில் வேளாண்மை செய்கை,மீன் பிடி,காட்டுத் தொழில் போன்ற வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளில் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் நிலையும் இடம்பெறுவதாக கூறுகின்றனர்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும்  இடையில்  அடிக்கடி இடம்பெறும் மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றன. 

வாகரை பிரதேசத்தில் இதுவரை 2  யானைகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை மாவட்டத்தில் இம் மாத முடிவிற்குள் 3 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13