செ.தேன்மொழி

ஊர்காவற்துறை - கரம்பன் கடற்பகுதியில் 130 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊர்காவற்துறை - கரம்பன் கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது , சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த படகில் இருந்து சந்தேகத்திற்கிடமான 4 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 130 கிலோ 760 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 39 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை மற்றும் பேசாலை பகுதியைச் சேர்ந்த 26,31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.