மட்டக்களப்பு கோரவெளி கிராமசேவகர் பிரிவின் ஆயிலடிச்சேனை கிராமத்தை சேர்ந்த நாகராசா கரிசனன் வயது (14) என்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 2.30 மணியளவில் நண்பருடன் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தோணியானது காற்றின் வேகம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியினை சென்றடைய முற்பட்டுள்ளது .
இதனால் கரையில் நின்ற நண்பனின் உதவியினை நாடி காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார்.
கரையில் நின்ற நண்பனோ தோணியின் கயிற்றினை பிடித்து இழத்து கட்ட முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என சம்பவத்துடன் தொடர்புடைய அவரது நண்பர் தெரிவித்தார்.
இறுதியில் அயலவர்களின் உதவியினை நாடியுள்ளனர். அதற்குள் பயத்தின் காரணமாக தோணியில் இருந்த குறித்த சிறுவன் ஆற்றில் பாய்துள்ளார். பாய்ந்தவரை காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் குறித்த சிறுவனின் சடலத்தினை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM