கொழும்பு (சின்ஹுவா) இலங்கையின் அரசியல் கட்சிகள் அமைச்சரவை அமைச்சர்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அக் கட்சியின் நுற்றாண்டு நிறைவை இணையவழி மகாநாடொன்றின் மூலம் செவ்வாயன்று கொண்டாடினர். 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்த  மகாநாட்டில் பிரதமரும் ஆளும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ சீனக்கட்சியின் வரலாறு மற்றும் நூற்றாண்டு சாதனைகள் குறித்தும் பிரதான உரை நிகழ்த்தினார்.

"போரின் போதும் அதற்கு பின்னரும் எமது சுதந்திரத்துக்காக சீன அரசாங்கம் செய்த உதவிகளையும் அர்ப்பணிப்புகளையும் என்றென்றும் செய்யப்போகும் கடப்பாடுகளையும் மதிக்கிறோம்" என்று ராஜபக்ஷ  கூறினார்.

சீன - இலங்கை நட்புறவை வர்ணிப்பதற்கு மகாவம்சத்தை மேற்கோள் காட்டிய ராஜபக்ச  “மகிழ்ச்சியிலும்  கவலையிலும் நட்புறவு புராதன சுவரோவியங்கள் மாதிரி ஒரேமாதிரியாகவே இருந்துவந்திருக்கிறன” என்று குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதியும ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால  சிறிசேன உரையாற்றுகையில்,  “சீனாவுடனான வரலாற்று ரீதியான ஒத்துழைப்பையும் நட்புறவையும் இலங்கையர்கள் பெரிதாக மதிக்கிறார்கள்” என்று சொன்னார்.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க,  “சீனக்கம்யூனிஸ்ட் சீனாவை உலகின்  மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக வழிநடத்தியிருக்கிறது” என்றார்.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளரான டியூ குணசேகர பேசுகையில், “ஆசியாவின் எழுச்சிக்கு சீனக் கம்யூனிஸட் கட்சி பங்களிப்பைச் செய்திருக்கிறது. கடினமான வறுமை ஒழிப்புக்கும் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துக்கும் அந்தக்கட்சி செய்த பங்களிப்பு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது” என்றார்

இலங்கையின் பழம்பெரும்  கட்சியும் முதன்முதலான சோசலிச கட்சியுமான  லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச்செயலாளரான திஸ்ஸ விதாரன தனதுரையில், “தங்களது கட்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான பிணைப்புக்கைளை வலுப்படுத்த விரும்புகிறது”  என்றார்.

 “சீனக் கம்யூனிஸ்ட்  கட்சி எப்போதும் மக்களுடனேயே நின்றது. சீனா ஒரு சக்திமிக்க தேசமாக வளர்வதற்கு மக்களுக்கு சேவைசெய்தது” என்று  ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் பொதுச்செயலாளரான அசங்க நவரத்ன தனதுரையில் குறிப்பிட்டார்.

 சீனத்தரப்பில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் தலைவரான சொங் ரேவோ, சீனத்தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியார் பேசினர்.

சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியின் வரலாற்றை  மீய்வுசெய்த ராவோ கட்சியின் மூல முதல் அபிசைகளுக்கான அதரவை மீள வலியுறுத்தினார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் ஒரேமாதிரியான வரலாற்று அனுபவங்கள் இருப்பதாகக் கூறியஅவர் பரஸ்பர பரிமாற்றங்களையும் படிப்பினைகளையும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுத்தவும் செய்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே மக்கள் பக்கம் நிற்கிறதே. அது சீனா சக்கதிமிக்க  நாடாக வருவதற்கு சேவை செய்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா மகாஜன கட்சி பொதுச்செயலாளர் அசங்க நவரட்ன தனதுரையில் கூறினார்.

 ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அதன் நேசக்கட்சிகளும் உட்பட 11 கட்சிகள் மகாநாட்டின் இறுதியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நாட்டு மற்றும் சர்வதேசே சாதனைகளை பாராட்டி கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டன.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் நலன்களுக்காக உறுதியாக இடையறாது குரல் கொடுத்துவருகின்ற  அதேவேளை, அந்த நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துகிறது.

அத்துடன்   மண்டலமும் பாதையும்  நாடுகளின் சுயாதிபத்தியத்தையும் மதிக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. சீனக்கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்  இடையில் பரஸ்பரம்  அரசியல் ஆதரவையும் நடைமுறை ஒத்துழைப்பையும் வளர்க்கவேண்டும் என்றும் முன்னேற்றத்தையும் சமாதானத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையொன்றில் அழைப்பு விடுத்தது.