நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை (21) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பயணக் கட்டுப்பாடு ஜூன் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மீண்டும் அமுல்படுத்தப்பட்டு ஜூன் 25 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

அது போன்று நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் களியாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.