சீன வலையில் மற்றுமொரு தீவா ?

18 Jun, 2021 | 04:30 PM
image

உலகின் மிகப்பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் ஒன்றான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள ஒரு சிறிய நாடான மாலைத்தீவு உள்ளது.

ஏடன் வளைகுடா - ஹார்முஸ் நீரிணை மற்றும் மலாக்கா ஜலசந்தி ஊடான எரிசக்சி  வர்த்தக மூலோபாய பாதை  மாலைத்தீவுக்கும் உலகிற்கும் முக்கிய இடம்பெறுகின்றது.

அதுமாத்திரமன்றி மாலைதீவின் நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையிலும் இந்திய துணைக் கண்டத்தின் புவிசார் அரசியலில் முக்கியத்துமிக்க நாடென்ற வகையிலும் தனித்துவமிக்கதாக மாறியுள்ளது.

மேலும் சுற்றுலா மற்றும் மீன் வளத்தை தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கொண்டுள்ளது. தென் சீன கடலில் சீனாவுடன் முரண்பட்டு வரும் அதேவேளை சீன கடன் சுமையால் நெருக்கடிகளை இழந்து வருகின்றது. இந்திய பெருங்கடலின் அதிகாரப் போட்டியில் சிக்கபோகும் நாடாகவும் மாலைத்தீவை கருத முடிகிறது.

மாலைத்தீவுடனான இந்திய உறவில் அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் சமுத்திர பாதுகாப்பு மற்றும் பிராந்திய நாடுகளின் வளர்ச்சி போன்ற  கோட்பாடுகளை முதன்மைப்படுத்தியதாக இந்தியாவின் அணுகுமுறைகள் அமைந்துள்ளன. இந்திய நிறுவனங்களுக்கு சந்தை அணுகலை வழங்கும் என்ற நம்பிக்கையில் மாலைத்தீவில் புதிய தூதரகத்தை திறக்க இந்தியா சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதனடிப்படையில் அயல் நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியா பல திட்டங்களை முன்னிறுத்தி வருகின்றது. உதாரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் இந்திய ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் தீவு தேசத்தில் அதன் இராஜதந்திர இருப்பை அதிகரிக்கும் வகையில் மாலைத்தீவில் துணை தூதரகம் ஒன்றை ஸ்தாபிக்க ஒப்புதலின் பிரதிப்பளிப்புகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.  

துறைமுகங்கள், வீதிகள், பாலங்கள், நீர் மற்றும் சுகாதார கட்டமைப்புகள் மற்றும் சமூக - பொருளாதார மேம்பாடுகள் தொடர்பான சுமார் 2 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய பல திட்டங்களை இந்தியா முன்னெடுத்துள்ளது. மாலத்தீவின் புவியியல் இருப்பிடத்தின் மூலோபாய நன்மைகளைப் பெற  சீனா தீவிர முயற்சிக்கு இத்தருணத்தில் மாலைத்தீவுடன்  இந்தியா கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

மாலைத்தீவில் சீனா  பல திட்டங்களை வேகமாக முன்னெடுத்து  வளர்ந்து வருகின்றது. மேலும் பல நகர்வுகளையும் கூர்மையாக்கியுள்ளது. இதில் முக்கியமானதொன்றாக மாலைத்தீவில் ஸ்தாபிக்க உத்தேசித்துள்ள சீனாவின் பெருங்கடல் கண்காணிப்பு கூட்டு மையத்தினை கூறலாம். இந்த திட்டத்தின் அமைவிடமானது  தென் சீன கடல் பகுதியை நோக்கியதாக  உள்ளதுடன் இந்தியாவின் லட்சத்தீவு துறைமுகத்திற்கு அருகாமையிலும் உள்ளது. இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்குள்ள மற்றுமொரு சவாலாக குறிப்பிடப்படுவதுடன் தென் சீன கடலின் அமைதிக்கும் சவாலாக அமையும்.

ஆனால் சீனாவின் பெருங்கடல் கண்காணிப்பு கூட்டு மையம் அமைக்கும் திட்டத்தை மாலைத்தீவின் ஜனாதிபதி அகற்றக் கூடும் என்ற கணிப்பும் தற்போது காணப்படுகின்றது.  எவ்வாறாயினும் இரு நாடுகளுமே கூட்டுப் பெருங்கடல் கண்காணிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான நெறிமுறை என்ற தலைப்பில் 2017 ஆம் ஆண்டில் பூர்வாங்கல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.

இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதையில் விழிப்புணர்வைக் கடைப்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்த திட்டத்ததை குறிப்பிட்டாலும்  சிவில் மற்றும் இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட இரட்டை நோக்கத்திற்காக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

மேலும், சீன திட்டங்களின் மீது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள  அதிருப்தியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அழகிய இடங்களை சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்வதாக உறுதியளித்து சீனா ஏற்கனவே மாலைத்தீவின் வடக்கு பகுதியில் 17 க்கும் அதிகமான பவள திட்டுக்களை  வாங்கியுள்ளதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட் குறிப்பிட்டுள்ளார். இந்த தீவுகளில் உள்ள சீன நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் போதுமான தெளிவு அளிக்காமல் இவை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தொடர்ந்து ஊடுருவி அதன் செல்வாக்கை விரிவுபடுத்த முயன்று வருகிறது என்ற பார்வையிலிருந்தே மாலைத்தீவின் மீதான சீன ஆர்வத்தை ஆராய வேண்டும் என புவிரசார் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு ஒத்திசைவாகவே  சீனா - பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பின் ஒரு பகுதியான குவாடர் துறைமுகத்தின் வளர்ச்சியும் நடவடிக்கைகளும் கணிக்கப்படுகின்றது.

சீனா, அதன் உலகளாவிய கால்தடங்களை அதிகரிப்பதற்கான ஒரு திட்டமிட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் நாடுகளை கையாள்கின்றது. குறிப்பாக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பலவீனமான நாடுகளில், இந்திய துணைக் கண்டம் உட்பட உலகெங்கிலும், நீடித்த மற்றும் சாத்தியமற்ற கடனுக்கான உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் தந்திரோபாயமாக சீனா ஈடுபடுவதாக விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. இதே கொள்கையின் ஒரு பகுதியாக, பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் சீன - மாலைத்தீவு நட்பு பாலத்திற்கு மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் சீன உதவியைப் பெற்றிருந்தார்.

ஆனால் தேர்தலுக்குப் பின், இப்ராஹிம் முகமது சோலிஹின் கீழ் ஒரு புதிய அரசாங்கம் பதவியேற்ற போது 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் சீனக் கடன் மற்றும் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டு வியந்து போனதாக புதிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

சுற்றுலா மற்றும் மீன்வளத்தை நம்பியுள்ள சிறிய தீவு நாடென்ற வகையில் , மாலைத்தீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அந்த வகையில் சீனாவின் கடன் நெருக்கடி ஆபத்தானது என்பதை உள் நாட்டு அரசு உணர்ந்துக்கொண்டுள்ளது.  

இதனையடுத்தே பிராந்தியத்தில் புதிய ஏகாதிபத்திய சக்தியாக சீனா முயற்சிக்கிறது என்பதை வெளிப்படையாக கூறி  குடிமக்களை மாலைத்தீவு புதிய அரசு எச்சரித்தது. கவனத்தில் கொள்ளப்படா விட்டால் மாலைத்தீவும்  இலங்கையின் தற்போதைய நிலைமையை எதிர்கொள்ள நேரிடும். 

ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை அணுகுவதற்கோ  பயனடைவதற்கோ உரிமை இழந்த நிலையிலேயே இலங்கை இன்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  2017 இல் சீனாவுடன் 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திட்டமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகின்றது. இது பொதுவாக பீஜிங்கின் கடன் கொள்கையை பிரதிப்பளிப்பதாகவும் உள்ளது.

பொருளாதார மேன்மையையும் பண பலத்தையும் பயன்படுத்தி, சீனா பலவீனமான வெளிநாட்டு நாடுகளுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் கடன்களுக்கு கடன் கொடுத்து மீள பெற்றுக்கொள்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13