விம்பிள்டன் மற்றும் டோக்கியோவில் ஆரம்பமாகும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

தனது அணியினருடன் கலந்தாலோசித்த பின்னரே தான் இந்த முடிவை எடுத்ததாகக் இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரஃபேல் நடால் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் 35 வயதான ஸ்பெய்ன் வீரர் நடால் ரோலண்ட் கரோஸில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபனின் அரையிறுதி ஆட்டததில் நோவக் ஜோகோவிச்சிடம் தோற்றுப் போனார்.

அதன் பின்னர் நடால் உடல் ரீதியான சிரமங்களை எதிர்நோக்கினார்.

நடால் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவிலும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் மார்க் லோபஸுடன் இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.