அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியே எதிர்கட்சி - மனுஷ நாணயக்கார

Published By: Digital Desk 3

18 Jun, 2021 | 10:34 AM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்ததாக அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியே எதிர்கட்சியாகும். அந்த கட்சியின் தலைவரே எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்படுவார் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்தால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற அநாவசிய பிரச்சினையை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இரகசிய தொடர்பு வெளிப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்ற அரசியல் கட்சியின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் 60 ஆசனங்களைப் பெற வேண்டுமெனில் ஆளுங்கட்சியிடமிருந்து தான் அவற்றை பெற முடியும்.

ரணில் விக்கிரமசிங்க பாரளுமன்றம்  வருவார் என்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. அரசாங்கத்தின் தோல்வியை மறைப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37