அமெரிக்க மாநிலமான அரிசோனாவில் வியாழக்கிழமை நடந்த பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் அரிசோனாவின் பீனிக்ஸ் நகரத்திலிருந்து வடமேற்கே 20 மைல் தொலைவில் உள்ள மேற்கு பள்ளத்தாக்கில் துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள் எட்டு தனித்தனியான இடங்களில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.