நாட்டில் கொரேனா தொற்று காணமாக நேற்று 16.06.2021 ஆம் திகதி மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.

அந்த வகையில் கொரேனா தொற்று காரணமாக, 30 தொடக்கம் 59 வயதுக்கிடையில் 05 பெண்கள், 09 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 பெண்கள், 22 ஆண்களுமாக 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2425 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.