தர்மபுரம் பொலிஸ்  புலனாய்வு  பிரிவினருக்கு கிடைக்கப் பெற்றத் தகவளுக்கமைய  16.06.2021 நேற்றையதினம் புளியம்போக்கணை கலவெட்டித்திடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று டிப்பர்களின்  சாரதிகளும், உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்ற பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.