மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை பகுதியில் தொல்பொருள் இடமாக அடையாளமிட்ட பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 3 பேரை இன்று வியாழக்கிழமை (17)  இரவு கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு போன்ற பொருட்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று இரவு குறித்த பகுதியினை பொலிசார் சுற்றிவளைத்தபோது அங்கு புதையல் தோண்டலில் ஈடுபட்ட கொக்கட்டிச்சோலை, மண்டூர், சென்றல்காம் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு, பூஜைப் பொருட்களை மீட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.